dhawan revealed the reason of his trade mark celebration
இந்திய வீரர் ஷிகர் தவானின் டிரேட் மார்க்காக அறியப்படுவது, கேட்ச் பிடித்தவுடன் அவர் தொடையை தட்டுவதுதான். அதற்கான காரணத்தை ஷிகர் தவான் விளக்கியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், இந்திய அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். விக்கெட்டுகள் வீழ்த்தும்போதும் கேட்ச்களை பிடிக்கும்போதும் ஒவ்வொரு வீரரும் தங்களுகே உரிய பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதேபோல, ஷிகர் தவானின் டிரேட் மார்க்காக அமைந்தது தான் அவர் தொடையை தட்டும் செயல்.
அதுவும் பவுண்டரி கோட்டின் அருகே கேட்ச் பிடித்துவிட்டு ரசிகர்களை நோக்கி தொடையை தட்டி கொண்டாடுவதை ரசிகர்கள் ஆர்ப்பரித்து ரசிப்பர். அவர் தொடையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷிகர் தவான், தனக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்பதால், அதே பாணியில் தொடையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். அது ரசிகர்களுக்கு பிடித்துப்போக அதை அப்படியே தொடர்ந்துவிட்டார் தவான்.
