ஐக்கிய அரபு நாடுகளில் (யுஏஇ) வளரும் ஆசிய நாடுகள் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஏசிசி (ஆசிய கிரிக்கெட் கவுன்சில்) செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. 

அதில், "இந்தியா சார்பில் 2018-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை செப்டம்பர் 13 முதல் 28-ஆம் தேதி வரை துபாய், அபுதாபியில் நடத்த வேண்டும்.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆசியக் கோப்பை தகுதிப் போட்டியில் வெல்லும் அணி உள்ளிட்டவை பங்கேற்கும். 

மேலும், வளரும் ஆசிய நாடுகள் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான், இலங்கையில் நடத்த வேண்டும். 

லாகூரில் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.