de villiers prediction of title winner of this ipl
இந்த ஐபிஎல் சீசனை தோனி தலைமையிலான சென்னை அணி தான் வெல்லும் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃபிற்கு ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன.
முதல் தகுதி சுற்று போட்டி சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே இன்று நடைபெறுகிறது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் இந்த முறையும் அந்த வாய்ப்பை தவறவிட்டன. பிளே ஆஃபிற்கே தகுதி பெறவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி, சிறப்பாக ஆடிவருகிறது. இந்த முறை கோப்பையை வெல்லுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தொடரிலிருந்து வெளியேறிய பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ், இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் சிறப்பாக கேப்டன்சி செய்து ஹைதராபாத் அணியை வழிநடத்துகிறார். சென்னையும் ஹைதராபாத்தும் இறுதி போட்டியில் மோதும். தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை வெல்லும் என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
