csk is the leading six scorers in ipl league
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து, இன்று முதல் தகுதி சுற்று போட்டி தொடங்குகிறது.
இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. முதல் தகுதி சுற்று போட்டியில், இன்று சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
லீக் போட்டிகள் முடிந்த நிலையில், லீக்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக சென்னை அணி உள்ளது. 130 சிக்ஸர்களுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் 115 சிக்ஸர்கள் அடித்துள்ளன. மும்பை 107 சிக்ஸர்களும் பெங்களூரு அணி 106 சிக்ஸர்களும் அடித்துள்ளன. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஹைதராபாத் அணி, 68 சிக்ஸர்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் அனைத்து அணிகளையும் வீழ்த்திய ஒரே அணியும் சென்னை மட்டும் தான். மற்ற எந்த அணிகளும் அனைத்து எதிரணிகளையும் வீழ்த்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தோனியின் தலைமையில் களமிறங்கியுள்ள சென்னை அணியின் ஆட்டத்தை கண்டு எதிரணிகள் மிரண்டுதான் போயுள்ளன.
