கிறிஸ்டியானோவிற்கு அவரது காதல் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகுஸ் கிறிஸ்துமஸ் பரிசாக புதிதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து அவரை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த ரொனால்டோ 1992 ஆம் ஆண்டு முதல் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். தனது 18ஆவது வயதில் போர்ச்சுகள் அணியில் இடம் பெற்று தற்போது வரையில் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் 100க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த கால்பந்து போட்டியில் ஐரோப்பா அணிக்கு எதிராக தனது முதல் கோலை பதிவு செய்தார்.
100ஆவது டெஸ்டில் சாதனை படைத்த வார்னர்: 3ஆவது முறையாக இரட்டை சதம்!
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பரிசாக அவருக்கு காஸ்ட்லியான் கார் ஒன்றை அவரது காதல் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகுஸ் வாங்கி கொடுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் ஜார்ஜினா பதிவிட்டுள்ளார். அதில், ரொனால்டோ மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜார்ஜினா வீட்டை விட்டு வெளியில் வருகிறார். அங்கு, வெள்ளை நிறம் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரைக் கண்டதும் ரொனால்டோ மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!
அதன் பிறகு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பயணம் செல்கிறார். இந்த காரில் விலை இந்திய மதிப்பில் மட்டும் ரூ. 7 கோடி என்று சொல்லப்படுகிறது. ரொனால்டோவும் தனது பங்கிற்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார். இது 6.6L ட்வின் டர்போ வி12 பவர் பிளாண்ட்கொண்டது. 4.3. மில்லி வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
100ஆவது டெஸ்ட்டில் சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்!
