Cricket has given 92 runs to four balls for 10 years The verdict

வங்கதேசத்தில் நடைபெற்ற கிளப்புகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது நான்கு பந்துகளில் 92 ஓட்டங்கள் கொடுத்த பந்துவீச்சாளருக்கு 10 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

வங்கதேசம், லால்மாடியா கிளப்பைச் சேர்ந்த பந்துவீச்சாளர் சுஜோன் மஹ்முத். கடந்த மாதம் நடைபெற்ற ஆட்டத்தின்போது சுஜோனின் லால்மாடியா அணி முதலில் பேட் செய்து 14 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இதையடுத்து, எதிரணியான ஆக்ஸியோம் கிரிக்கெட்டர்ஸ் களமிறங்கியபோது, முதல் ஓவரை சுஜோன் மஹ்முத் வீசினார்.

அதில் 13 ஒய்டுகள், 3 நோ பால்கள் என அவர் வீசிய அனைத்து பந்துகளுமே பவுண்டரி லைனை தொட எதிரணிக்கு 80 ஓட்டங்கள் கிடைத்தது.

அவர் சரியாக வீசிய 4 பந்துகளையும் அக்ஸியோம் தொடக்க வீரர் முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் பவுண்டரிக்கு விளாச 0.4 ஓவர்களில் 92 ஓட்டங்கள் எடுத்து வென்றது ஆக்ஸியோம் கிளப்

மேலும், இந்தப் போட்டியின்போது, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடுவரைக் கடுப்பேற்றினார். அவரது இந்த செயல் கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி அவருக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.