இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜூனியர் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிடுக்கு 44-ஆவது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார்.

அவருக்கு டிவிட்டரில் ஏராளமானோர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

விராட் கோலி (இந்திய கேப்டன்):

பிறந்த நாள் வாழ்த்துகள் ராகுல். இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதோடு, அவர்களுக்கு நல்ல முன் உதாரணமாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி.

சேவாக்: திராவிட், "வி' அமைப்பில் (கவர் டிரைவர், ஸ்டிரெய்ட் டிரைவ், மிட் ஆன் டிரைவ்) விளையாடக் கூடியவர். அதேநேரத்தில் அவர் மிகப்பெரிய "சி' ஆவார். அதாவது "சி' என்றால் அர்ப்பணிப்போடும், தரமாகவும், தொடர்ச்சியாகவும், கவனமாகவும் விளையாடக்கூடியவர். அவருடன் விளையாடியதை நினைத்து பெருமை கொள்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் ராகுல் திராவிட்.

ஐசிசி:

தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ராகுல் திராவிடும் ஒருவர். அவர், சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆயிரத்த் 208 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ளார். ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

விஜய் கோயல் (விளையாட்டுத் துறை அமைச்சர்):

தலைசிறந்த மனிதரும், இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சுவருமான ராகுல் திராவிடுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர், இரண்டு பந்துகளில் 2 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அது உங்களுக்கு தெரியுமா?