Asianet News TamilAsianet News Tamil

காமன்வெல்த் போட்டிகள் 2022: முதல் நாளில் இந்தியாவிற்கான போட்டிகள், எந்தெந்த வீரர்கள் ஆடுகின்றனர்? முழு விவரம்

பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் 2022ன் முதல் நாளில் இந்தியாவிற்கான போட்டிகளின் பட்டியல் மற்றும் எந்தெந்த வீரர்கள் விளையாடுகின்றனர் என்பதை பார்ப்போம்.
 

commonwealth games 2022 indias day 1 schedule at birmingham
Author
Birmingham, First Published Jul 22, 2022, 3:19 PM IST

1930ம் ஆண்டு தொடங்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகளின், 22வது எடிஷன் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்கிறது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன.

 72 நாடுகளிலிருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். 

ஈட்டி எறிதல், மல்யுத்தம், பளுதூக்குதல், ஹாக்கி, மகளிர் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஜூலை 28ம் தேதி காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா நடக்கிறது. ஜூலை 29ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 7 வரை போட்டிகள் நடக்கின்றன. ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவு விழா நடக்கவுள்ளது. 

ஜூலை 29ம் தேதியான காமன்வெல்த்தின் முதல் நாளில் இந்தியாவிற்கான போட்டிகள் மற்றும் எந்தெந்த வீரர்கள் அன்றைய தினம் விளையாடுகின்றனர் என்ற விவரம் இதோ..

முதல் நாளில் மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆகிய இரண்டு ஹாக்கி அணிகளுமே ஆடுகின்றன. 

ஸ்குவாஷ் ஸ்டார் வீரர்களான சௌரவ் கோஷல் மற்றும் ஜோசஹனா சின்னப்பா ஆகியோரும், டேபிள் டென்னிஸ் அணி, பாக்ஸிங்கில் ஷிவா தாப்பா மற்றும் இந்திய பேட்மிண்டன் அணியும் முதல் நாளில் விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள் 2022: எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள்..? முழு போட்டி அட்டவணை

Lawn Bowl - மாலை 5.30 மணி (இந்திய நேரம்)

சுனில் பஹதூர், சந்தன் குமார் சிங், நவ்நீத் சிங், தினேஷ் குமார், ம்ரிதுல் பார்கொஹைன், பிங்கி, டானியா சௌத்ரி, ரூபா ராணி டிர்க்கி, நயன் மோனி சைக்கியா, லவ்லி சௌபி.

டேபிள் டென்னிஸ் - மாலை 6.30 (இந்திய நேரம்)

ஆடவர் மற்றும் மகளிர் தகுதிச்சுற்று, சுற்று 1

மகளிர் டேபிள் டென்னிஸ் அணி - மானிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, ரீத் ரிஷ்யா, தியா சிட்டாலே.

ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி - ஷரத் கமல், ஞானசேகரன் சத்தியன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி.

நீச்சல் - இரவு 7.30 மணி (இந்திய நேரம்)

வீரர்கள் - சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், குஷக்ரா ராவத்

மகளிர் கிரிக்கெட் - இரவு 8 மணி (இந்திய நேரம்)

இந்தியா vs ஆஸ்திரேலியா (க்ரூப் மேட்ச்)

மகளிர் டிரயத்லான் - இரவு 8 மணி

வீராங்கனைகள் - சஞ்சனா ஜோஷி, பிரஞ்யா மோகன்

பாக்ஸிங் - இரவு 9 மணி

ஷிவா தாப்பா - ஆடவர் (Round of 32)

சுமித் குண்டு - ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு (Round of 32)

இதையும் படிங்க-  காமன்வெல்த்தில் கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்! 1.2 மில்லியன் டிக்கெட் விற்பனை

ஸ்குவாஷ் - இரவு 9 மணி

ஆடவர் ஒற்றையர் - ராமித் டண்டன், சௌரவ் கோஷல், அபய் சிங்

மகளிர் ஒற்றையர் - ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங், சுனைனா குருவில்லா

பேட்மிண்டன் - இரவு 11 மணி

கலப்பு அணி தகுதிச்சுற்று 1 - இந்தியா vs பாகிஸ்தான்

பாக்ஸிங்:

ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவு - ரோஹித் டோகாஸ்

ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு - ஆஷிஷ் சௌத்ரி

ஆடவர் ஹாக்கி:

இந்தியா vs கானா
 

Follow Us:
Download App:
  • android
  • ios