Asianet News TamilAsianet News Tamil

காமன்வெல்த் போட்டிகள் 2022: எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள்..? முழு போட்டி அட்டவணை

காமன்வெல்த் 2022 போட்டிகள் வரும் 29 முதல் ஆகஸ்ட் 8 வரை பர்மிங்காமில் நடக்கவுள்ளது. காமன்வெல்த் போட்டிகளின் முழு அட்டவணையை பார்ப்போம்.
 

commonwealth games 2022 full schedule and list of events
Author
Birmingham, First Published Jul 22, 2022, 2:45 PM IST

காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடக்கிறது. 72 நாடுகளிலிருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

காமன்வெல்த் முழு போட்டி அட்டவணை:

ஜூலை 28: தொடக்க விழா

ஜூலை 29 - ஆகஸ்ட் 2: கூடைப்பந்து 3*3: காமன்வெல்த்தில் முதல் முறையாக இந்த பிரிவு நடத்தப்படுகிறது. 

இதையும் படிங்க - காமன்வெல்த் 2022 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள்..! முழு பட்டியல் இதோ

ஜூலை 29 - ஆகஸ்ட் 3: அகுவாடிக்ஸ் - நீச்சல் மற்றும் பாரா நீச்சல்

ஜூலை 29 - ஆகஸ்ட் 8: பேட்மிண்டன் 

ஜூலை 29 - ஆகஸ்ட் 4,6,7: பாக்ஸிங்

ஜூலை 29-31; ஆகஸ்ட் 2-4, 6-7: கிரிக்கெட் டி20 - முதல் முறையாக காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஜூலை 29 - ஆகஸ்ட் 1: சைக்கிளிங் - டிராக் மற்றும் பாரா டிராக்: லீ வேலி வெலோபார்க்கில் இண்டோர் சைக்கிளிங் செண்டரில் நடக்கிறது. ஸ்பிரிண்ட்/பாரா ஸ்போர்ட் டாண்டெம் ஸ்பிரிண்ட், டைம் டிரையல், ஸ்க்ராட்ச் ரேஸ், பாயிண்ட்ஸ் ரேஸ், டீம் ஸ்பிரிண்ட் மற்றும் கெரின்.

ஜூலை 29 - ஆகஸ்ட் 2: ஜிம்னாஸ்டிக்ஸ் - ஆர்டிஸ்டிக்ஸ் - அரேனா பர்மிங்காமில் நடக்கிறது.

ஜூலை 29 - ஆகஸ்ட் 6: லான் பௌல்ஸ் மற்றும் பாரா லான் பௌல்ஸ் - விக்டோரியா பார்க்கில் நடக்கிறது.

ஜூலை 29 - ஆகஸ்ட் 8: நெட்பால் 

ஜூலை 29 - ஆகஸ்ட் 8: ஹாக்கி - பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் அவுட்டோர் பிட்ச்களில் ஹாக்கி போட்டிகள் நடக்கின்றன.

ஜூலை 29 - ஆகஸ்ட் 8: ஸ்குவாஷ் 

ஜூலை 29 - ஆகஸ்ட் 8: டேபிள் டென்னிஸ் மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் - 2002ம் ஆண்டிலிருந்து காமன்வெல்த்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஆடப்பட்டுவருகிறது. ஆனால் இந்த ஆண்டுதான் பாரா டேபிள் டென்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - காமன்வெல்த்தில் கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்! 1.2 மில்லியன் டிக்கெட் விற்பனை

ஜூலை 29 - 31: டிரயத்லான் மற்றும் பாரா டிரயத்லான்

ஜூலை 30 - ஆகஸ்ட் 3: பளுதூக்குதல்

ஜூலை 30 - ஆகஸ்ட் 7: பீச் வாலிபால்

ஆகஸ்ட் 1 - 3: ஜூடோ - 2018 காமன்வெல்த்தில் ஜூடோ ஆடப்படவில்லை. இப்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2 - 7: தடகளம்

ஆகஸ்ட் 3: சைக்கிளிங்  - மௌண்டைன் பைக் 

ஆகஸ்ட் 4: சைக்கிளிங் - டைம் டிரையல் 

ஆகஸ்ட் 4: பாரா பவர்லிஃப்டிங் 

ஆகஸ்ட் 4 - 6: ஜிம்னாஸ்டிக்ஸ் 

ஆகஸ்ட் 4- 8: அகுவாடிக்ஸ் - டைவிங்

ஆகஸ்ட் 5 - 6: மல்யுத்தம்

ஆகஸ்ட் 7: சைக்கிளிங் - ரோட் ரேஸ் - வார்விக்ஸ் மைட்டான் ஃபீல்ட்ஸ், க்ரீன் ரீக்ரியேஷன் ஸ்பேஸ்.

ஆகஸ்ட் 8 - நிறைவு விழா
 

Follow Us:
Download App:
  • android
  • ios