காமன்வெல்த் போட்டி குத்துச்சண்டைப் பிரிவில் பதக்கப் பட்டியலில் இடம் பெற இந்திய வீராங்கனை மேரிகோமுக்கு ஓரே ஒரு வெற்றி தேவை.

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. 

இதில் இந்திய வீராங்கனை மேரி கோம் பதக்கப் பட்டியலில் இடம் பெற ஓரே ஒரு வெற்றியை பெற்றாலே போதும்.  காலிறுதிச் சுற்றில் அவர் ஸ்காட்லாந்தின் மேகன் கார்டனுடன் மோத இருக்கிறார். 

அதிபோன்று இந்த போட்டியின் 75 கிலோ பிரிவில் இந்திய வீரரான விகாஸ் காலிறுதி வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற மற்றொரு வீரரான சதீஷ்குமாரும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் காமன்வெல்த் போட்டி பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், இந்திய வீரர்கள் பிவி.சிந்து தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர். காமன்வெல்த் முன்னாள் சாம்பியனான சாய்னா நேவால் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 

ஆடவர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி இணை 4-வது இடத்தை பெற்றுள்ளது. 

பெண்கள் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி - அஸ்வினி இணை தரவரிசையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. 

குழு போட்டிகளுடன் நாளை தொடங்கும் பாட்மிண்டன் பிரிவில் மலேசியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 16 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை போட்டியிட உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.