அதிக பதக்கங்களை வென்று சீனாவின் ஷாங் யூஃபெ முதலிடம் – மனு பாக்கருக்கு எத்தனையாவது இடம்?
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்கள் வென்றவர்களின் பட்டியலில் சீனா நாட்டைச் சேர்ந்த ஷாங் யூஃபே ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் உள்பட மொத்தமாக 6 பதக்கங்கள் கைப்பற்றி நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் உள்பட மொத்தமாக 6 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 71ஆவது இடம் பிடித்திருந்தது. இந்தியா சார்பில் மனு பாக்கர் இந்தியாவிற்கு முதல் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். மேலும், இந்த ஒலிம்பிக்கில் அதிக வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையாக மனு பாக்கர் 2 பதக்கங்களுடன் சாதனை படைத்தார்.
3ஆவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையி நழுவவிட்டார். கடைசி வெண்கலப் பதக்கத்தை மல்யுத்த வீரர் அமன் செராவத் வென்று கொடுத்தார். அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலப் பதக்கம் உள்பட மொத்தமாக 126 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கம் என்று 91 பதக்கங்களை கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்தது.
இந்த நிலையில் தான் அதிக பதக்கங்களை வென்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா நம்பர் 1 இடத்தில் இருந்தாலும், தனிநபர் பிரிவுகளில் அதிக பதக்கங்களை வென்றவர்களின் பட்டியலில் சீன நாட்டைச் சேர்ந்த ஷாங் யூஃபே ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் உள்பட மொத்தமாக 6 பதக்கங்கள் கைப்பற்றி நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
இதில் அவர் நீச்சல் போட்டிகளில் மட்டுமே 6 பதக்கங்களையும் வென்றுள்ளார். மகளிருக்கான 4 x 100மீ மெட்லி ரிலே, 4 x 100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 50மீ ஃப்ரீஸ்டைல், கலப்பு 4 x 100மீ மெட்லே ரிலே, மகளிருக்கான 100மீ பட்டர்பிளே மற்றும் மகளிருக்கான 200மீ பட்டர்பிளே என்று 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதில், கலப்பு 4 x 100மீ மெட்லே ரிலே பிரிவில் மட்டும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவரைத் தொடர்ந்து ஒலிம்பிக் தொடரை நடத்திய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மார்க்கண்ட் லியோன் 4 தங்கப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கம் என்று 5 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளார். இவரும் நீச்சல் போட்டியில் தான் 5 பதக்கங்களையும் கைப்பற்றியிருக்கிறார். ஆண்களுக்கான 200மீ ப்ரீஸ்ட்டிரோக், 400மீ தனிநபர் மெட்லே, 200மீ தனிநபர் மெட்லே, 200மீ பட்டர்பிளே ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 4 x 100மீ மெட்லே ரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து அமெரிக்கா வீராங்கனை 3 தங்கம், 2 வெள்ளி உள்பட 5 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று 10மீ ஏர் பிஸ்டல் பிரிவு கலப்பு இரட்டையரிலும் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- China
- LA 2028
- Los Angeles 2028
- Manu Bhaker
- Marchand Leon
- Olympic Medalist
- Olympics 2024
- Olympics 2024 India Medal Table
- Olympics Closing Ceremony 2024
- Olympics Closing Ceremony 2024 Live Performance
- PR Sreejesh
- Paris 2024
- Paris 2024 Olympics
- Paris 2024 Olympics 2024 Closing Ceremony
- Paris Olympics Closing Ceremony Date
- Paris Olympics Closing Ceremony Live
- Shooting
- Swimming
- Tom Cruise
- Zhang Yufei