இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
மாமல்லபுரத்தில் நடந்துவரும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29 முதல் நடந்துவருகிறது. இன்றுடன் போட்டிகள் முடிவடையும் நிலையில், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிறைவு விழா நடக்கிறது.
தொடக்க விழாவை போலவே நிறைவு விழாவிலும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 9) மாலை 6 மணிக்கு நிறைவு விழா தொடங்குகிறது. நிறைவு விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று செஸ் ஒலிம்பியாடில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளின் 10வது சுற்று போட்டி முடிவுகள்.! பிரக்ஞானந்தா வெற்றி.. குகேஷ் முதல் தோல்வி
நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி, துணைத்தலைவரும் 5 முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். தமிழக அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள்: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்களின் பட்டியல்..!
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இசை மற்றும் நடன கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. அதற்கான ஒத்திகை எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. தொடக்க விழாவை போலவே நிறைவு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.