Asianet News TamilAsianet News Tamil

காமன்வெல்த் போட்டிகள்: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்களின் பட்டியல்..!

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்களின் பட்டியலை பார்ப்போம்.
 

here is the full list of 61 medals of india in commonwealth games 2022
Author
Birmingham, First Published Aug 8, 2022, 8:28 PM IST

பர்மிங்காமில் கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்தியாவிற்கான அனைத்து போட்டிகளும் முடிந்துவிட்டன. 

இந்த காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். குறிப்பாக பளுதூக்குதல், பாக்ஸிங், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் பதக்கங்களை வாரி குவித்தார்.

இதையும் படிங்க - காமன்வெல்த்: இந்தியாவிற்கு 21வது தங்கம்! பேட்மிண்டனில் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்று அசத்தல்

22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என இந்தியா மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. எந்தெந்த வீரர்கள், வீராங்கனைகள் என்னென்ன பதக்கங்களை வென்றனர் என்ற முழு பட்டியலை பார்ப்போம்.

22 தங்கம்:

1. மீராபாய் சானு - பளுதூக்குதல்
2. ஜெர்மி லால்ரினுங்கா - பளுதூக்குதல்
3. அச்சிந்தா ஷூலி - பளுதூக்குதல்
4. இந்திய மகளிர் அணி - லான் பௌல்ஸ்
5. சுதிர் - பாரா பவர்லிஃப்டிங்
6. பஜ்ரங் புனியா - மல்யுத்தம் 
7. சாக்‌ஷி மாலிக் - மல்யுத்தம்
8. தீபக் புனியா - மல்யுத்தம் 
9. ரவி குமார் தாஹியா - மல்யுத்தம் 
10. வினேஷ் போகட் - மல்யுத்தம் 
11. நவீன் - மல்யுத்தம்
12. நீத்து கங்காஸ் - பாக்ஸிங்
13. அமித் பங்கால் - பாக்ஸிங்
14. எல்தோஸ் பால் - டிரிபிள் ஜம்ப்
16. நிகத் ஜரீன் - பாக்ஸிங்
17. ஷரத் கமல் & ஸ்ரீஜா அகுலா - டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்
18. பி.வி.சிந்து - பேட்மிண்டன்
20. லக்‌ஷ்யா சென் - பேட்மிண்டன்
21. ஷரத் கமல் - டேபிள் டென்னிஸ்
22. ராங்கிரெட்டி & சிராக் ஷெட்டி - பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர்

இதையும் படிங்க - காமன்வெல்த் ஹாக்கி ஃபைனலில் வெற்றி பெற்று தங்கம் வென்றது ஆஸ்திரேலியா..! படுதோல்வி அடைந்து வெள்ளி வென்ற இந்தியா

16 வெள்ளி:

1. சங்கேத் சர்கார் - பளுதூக்குதல்
2. பிந்தியாராணி தேவி - பளுதூக்குதல்
3. சுஷிலா தேவி - ஜூடோ
4. விகாஸ் தாகூர் - பளுதூக்குதல்
5. இந்திய கலப்பு அணி - பேட்மிண்டன்
6. துலிகா மான் - ஜூடோ
7. முரளி ஸ்ரீசங்கர் - நீளம் தாண்டுதல்
8. அன்ஷு மாலிக் - மல்யுத்தம்
9. பிரியங்கா கோஸ்வாமி - மகளிர் 10,000மீ நடை போட்டி
10. அவினாஷ் - ஆடவர் 3000மீ ஸ்டீபிள்சேஸ்
11. இந்திய ஆடவர் அணி - லான் பௌல்ஸ்
12. அப்துல்லா அபுபக்கர் - டிரிபிள் ஜம்ப்
13. ஷரத் கமல் & சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர்
14. மகளிர் கிரிக்கெட் அணி
15. சாகர் ஆலவத் - பாக்ஸிங்
16. ஆடவர் ஹாக்கி அணி

23 வெண்கலம்:

1. குருராஜா - பளுதூக்குதல்
2. விஜய் குமார் யாதவ் - ஜூடோ
3. ஹர்ஜிந்தர் கௌர் - பளுதூக்குதல்
4. லவ்ப்ரீத் சிங் - பளுதூக்குதல்
5. சௌரவ் கோஷல் - ஸ்குவாஷ்
6. குர்தீப் சிங் - பளுதூக்குதல்
7. தேஜஸ்வின் ஷங்கர் - உயரம் தாண்டுதல்
8. திவ்யா கக்ரான் - மல்யுத்தம்
9. மோஹித் க்ரெவால் - மல்யுத்தம்
10. ஜெய்ஸ்மின் லம்போரியா - பாக்ஸிங்
11. பூஜா கெலாட் - மல்யுத்தம்
12. பூஜா சிஹாக் - மல்யுத்தம்
13. முகமது ஹுசாமுதின் - பாக்ஸிங்
14. தீபக் நெஹ்ரா - மல்யுத்தம்
15. ரோஹித் தோகாஸ் - பாக்ஸிங்
16. சோனல்பென் படேல் - பாரா டேபிள் டென்னிஸ்
17. பவினா படேல் - பாரா டேபிள் டென்னிஸ்
17. மகளிர் ஹாக்கி அணி
18. சந்தீப் குமார் - ஆடவர் 10,000மீ நடை போட்டி
19. அன்னு ராணி - ஈட்டி எறிதல்
20. திலீப் பல்லிகல் & சௌரவ் கோஷல் - ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்
21. கிடாம்பி ஸ்ரீகாந்த் - பேட்மிண்டன்
22. த்ரீசா ஜோலி & காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன் கலப்பு இரட்டையர்
23. சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios