Chess Olympiad தொடக்க விழாவில் அணிகள் அறிமுகம்.. ஏ.ஆர்.ரஹ்மான் பட பின்னணி இசைகளுடன் கெத்தா வலம்வந்த உலக அணிகள்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், இந்த தொடரில் கலந்துகொள்ளும் அனைத்து நாட்டு அணிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
 

chess olympiad 2022 opening ceremony world teams introduced with ar rahman background music

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை  முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்ற தமிழக அரசு, அதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் இந்த செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்டு ஆடுகின்றனர். அவர்கள் எல்லாரும் சென்னை வந்துவிட்டனர். 

இதையும் படிங்க - Mkstalin- Chess: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஆரம்பம்...முதல்வர் ஸ்டாலின் செஸ் விளையாடி அசத்தல்...

இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடக்கவிழா நடந்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என பல தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.

மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை பிரதமர் நரேந்திர மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கிவைக்கவுள்ளார்.

பிரதமர் மோடி அரங்கிற்கு வருவதற்கு முன்பாக, அணிகள் அறிமுகம் உள்ளிட்ட மற்ற நிகழ்வுகள் நடந்துவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணியளவில் அரங்கிற்கு வந்துவிட்டார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொள்ளும் 186 நாடுகளின் அணிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த திரைப்பட பாடல்களின் இசை, பின்னணி இசையாக அமைய அனைத்து அணிகளும் கெத்தாக அரங்கில் வலம் வந்தன.

இதையும் படிங்க - Tamil News live : செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமாய் ஒளிரும் அரங்கம்

அணிகள் அறிமுகத்திற்கு பின்னர், வந்தே மாதரம் பாடலை இசைக்குழுவினர் பாடினர். அதைத்தொடர்ந்து இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களை நடன கலைஞர்கள் ஆடி அசத்தினர். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios