44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இதுக்குறித்து பேசிய அவர், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது பெருமைக்குரியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் சிறப்பாக தமிழ்நாடு அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வரலாற்று ரீதியாக செஸ் விளையாட்டுடன் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளது. தமிழ்நாட்டில் இது நடப்பது நம் நாட்டுக்கே பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாதுஎன்று தெரிவித்தார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News live: Chess Olympiad ஜோதியை ஏற்றிய இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ்
Tamil News live: Chess Olympiad ஜோதியை ஏற்றிய இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ்

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்தார். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலை, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் கலைநிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசனின் பின்னணி குரலில் இந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தை விட சிறந்த இடம் இல்லை... பிரதமர் மோடி புகழாரம்!!
தமிழன்னா சும்மா இல்லா... பல ஆயிரம் ஆண்டு வரலாறு.. கமலஹாசன் குரலில் தரமான சம்பவம்.. மாஸ் காட்டிய ஸ்டாலின்.
நடிகர் கமலஹாசன் குரலில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தமிழ் நிகழ்த்து கலை நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதில் தமிழ சோழ, பாண்டிய நிலங்களாக பிரித்து ஆண்டனர் என்பது குறித்தும், தமிழர்கள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் படிக்க
தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள்... கீழடியில் தந்தத்தினால் ஆன காய்கள்.. மார்தட்டிய முதல்வர்
தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள் என்பதற்கு கீழடியில் கிடைத்துள்ள ஆனைக் குப்பு என்ற சதுரங்க விளையாட்டிற்கான காய்கள் ஆதாரமாக உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். மேலும் படிக்க
தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய
தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். மேலும் படிக்க
நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் வருவேன்... வாக்கு மாறாத மோடி.. நெகிழ்ந்து பேசிய
நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி கூறியிருந்ததாகவும், அதேபோல அவர் கலந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் படிக்க
குறைந்த நேரத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயிகள் விளையாட்டுக்களை விளக்குவதாக இருக்கிறது. சதுரங்க விளையாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிய பிரக்ஞானந்தா, குகேஷ்
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். பிரதமரிடமிருந்து ஜோதியை பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிவைத்தனர். 
கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் வரலாறு!
சென்னை செஸ் ஒலிம்பியாட் விழாவில்.. நடிகர் கமல்ஹாசன் கம்பீர குரலில் தமிழர்களின் வரலாற்றை விளக்கும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது
பிரதமர் மோடிக்கு பரிசு
பிரதமர் மோடிக்கு 'மாமல்லபுர சிலை' பரிசு அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இரு பியானோக்களை வாசித்து தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்
தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து வெளிநாட்டினரை வியக்கவைத்தார். மேலும் இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்து மிரட்டினார்.
விரிவாக படிக்க - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஒரே சமயத்தில் 2 பியானோக்களை வாசித்து தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்
இதையும் படிங்க - இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?
பாரம்பரிய உடையில் விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சதுரங்க கரை பதிப்பு தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இது நம்ம டான்ஸ்!
சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கோலாகலம்! - வெளிநாட்டவரையும் கவர்ந்து இழுக்கும் நம்ம ஊரு டான்ஸ்
காரில் இருந்தப்படியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார் பிரதமர் மோடி
அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக காரில் செல்லும் பிரதமர் மோடி வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அளிக்கும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.பரதநாட்டியம் , இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அழகு தமிழ்.. நுனி நாக்கு ஆங்கிலம்.. செஸ் ஒலிம்பியாட்டிற்கு கம்பீரம் சேர்ந்த தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன்.. யார்..??
வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ் நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.மேலும் படிக்க
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொகுத்து வழங்கும் பாவனா!
வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ் நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு
ஐஎன்எஸ் ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பரதநாட்டியம் , இசைக்கருவிகல் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
தொடக்க விழாவில் சதுரங்க கரை வேட்டி, துண்டுடன் பங்கேற்கும் பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

சென்னை வந்தார் பிரதமர் மோடி - அமைச்சர்கள், எம்பிக்கள், ஈபிஎஸ், வானதி சீனிவாசன் வரவேற்பு
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் சென்னை விமானநிலையத்தில் பிரதமர் மோடி டி.ஆர்.பாலு, தயாதிமாறன் உள்ளிட்ட எம்.பிக்களும் வரவேற்றனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் வானதி சீனிவாசனும் பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பரதநாட்டியம்
நேரு விளையாட்டரங்கில் இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் கலைஞர்கள் அரங்கேற்றினர். தமிழநாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது.