தமிழன்னா சும்மா இல்ல... பல ஆயிரம் ஆண்டு வரலாறு.. கமலஹாசன் குரலில் தரமான சம்பவம்.. மாஸ் காட்டிய ஸ்டாலின்.
நடிகர் கமலஹாசன் குரலில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தமிழ் நிகழ்த்து கலை நடத்திக் காண்பிக்கப்பட்டது.
நடிகர் கமலஹாசன் குரலில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தமிழ் நிகழ்த்து கலை நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதில் தமிழ சோழ, பாண்டிய நிலங்களாக பிரித்து ஆண்டனர் என்பது குறித்தும், தமிழர்கள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டு இன்று கோலாகலமாக தொடங்கியது பாரதப் பிரதமர் மோடி போட்டியை தொடங்கிவைத்தார். முன்னதாக மணல் கொண்டு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் வரையப்பட்டது, பின்னர் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர்களில் பன்பாடு, கலை, கலாச்சாரங்களில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் நிகழ்த்துக் கலையாக செய்யப்பட்டது.
முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்தும், இந்தியப் பெருங் கடல் மார்க்கமாக ராஜேந்திரசோழன் கடல் கடந்து பல நாடுகள் மீது போர்த் தொடுத்து ஆட்சி செய்தார் என்பது குறித்தும், தமிழர்கள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சிலப்பதிகாரம் ஒரு சான்று என்பதும் விளக்கப்பட்டது.
ஏறுதழுவுதல் வீர விளையாட்டின் பாரம்பரியம் என்றும் அது கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்கியது என்பது குறித்து விளக்கப்பட்டது, பல்லவர்கள் உருவாக்கிய மாமல்லபுரம் இந்திய சிற்பக் கலையின் தலை சிறப்புமிக்க அடையாளம் என்பது குறித்தும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள் என்பது குறித்து விளக்கப்பட்டது.
1800 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறையில் தமிழர்கள் கலை கலாச்சாரத்தில் சிறந்து விளங்கினர் என்பதற்கு சான்றுகள் குறித்து விளக்கப்பட்டது, பத்தினி தெய்வம் கண்ணகியின் நீதி கேட்டு மதுரையை எரித்த வரலாறு குறித்தும் வாய்மையே வெல்லும் என்பதற்கு சான்றாக விளங்கியவர் கண்ணகி என்றும் அதற்காக சிலப்பதிகாரத்தையும் மேற்கோள் காட்டி முப்பரிமாணத்தில் விளக்கப்பட்டது
வாழும் இடங்களை ஐந்து திணைகளாக பிரிந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும், உலகின் மிகவும் பழமையான இலக்கண நூல்களில் ஒன்று தொல்காப்பியம் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. திருக்குறள், சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியங்கள் வாழ்வியலை உணர்த்துவதாகவும், திருக்குறளின் பெருமைக்கு சாட்சியாக கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை திகழ்கிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய நடனங்களும் மேடையில் அரங்கேற்றப்பட்டது. தமிழர்களின் அடையாளங்களாக திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் உள்ளனர் என்றும் முப்பரிமாணத்தில் திரையிடப்பட்டது.