Asianet News TamilAsianet News Tamil

அழகு தமிழ்.. நுனி நாக்கு ஆங்கிலம்.. ஒலிம்பியாட்டிற்கு கம்பீரம் சேர்த்த தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன்..யார்.?

வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ்  நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.
 

Who is Bhavana Balakrishnan who  best host the Olympiad?
Author
Chennai, First Published Jul 28, 2022, 6:05 PM IST

வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ்  நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஏன் ஒலிம்பியாட்..

உலகப் புகழ்பெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 187 க்கும் அதிகமான நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன. 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இதுவரை இல்லாத அளவுக்கு  இந்தியா களம் இறங்குகிறது.

Who is Bhavana Balakrishnan who  best host the Olympiad?

இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஏராளமான சர்வதேச அணிகள் கலந்து கொண்டுள்ளன, இந்தியாவில் சென்னையில் 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளதால், இது சென்னையில் நடத்தப்படுகிறது. செஸ் போட்டிகளில்  இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதால் சென்னையில் நடத்தப்படுகிறது.

யார் இந்த பாவனா பாலகிருஷ்ணன்...

சென்னையை பூர்விகமாக கொண்டவர் பாவனா, இவரின் முழுப்பெயர் பாவனா பாலகிருஷ்ணன்.  இவர் தமிழகத்தின் பல முன்னணி தொலைகாட்சிகளில் வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆவார், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமின்றி வர்ணனையாளர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர், காணொளி தொகுப்பாளினி, வானொலி தொகுப்பாளினி என பல முகங்கள் இவருக்கு உண்டு. 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், இந்திய தொலைக்காட்சிகளில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும் இருந்து வருகிறார்.

வானொலியில் தொடங்கிய பயணம்... 

இதுமட்டுமின்றி பின்னணி பாடகராகவும், நடனக்  கலைஞராகவும் அறியப்படுகிறார் பாவனா,  பிரபல கிரிக்கெட் தொகுப்பாளினியான மாயாந்தி லாங்கருக்கு அடுத்து  இந்திய அளவில் பிரபல விளையாட்டு வர்ணனையாளராகவும், கிரிக்கெட் செய்தியாளராகவும் இருந்துவருகிறார், தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தவுடன், வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய பாவனா,  பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் களமிறங்கினார். அந்த வரிசையில் முதன் முதன்முதலில்  ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிக்குச் சேர்ந்தார்.

Who is Bhavana Balakrishnan who  best host the Olympiad?

பேச்சால், மொழி வளத்தால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாவனா.. 

ராஜ் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி "பீச் கேர்ள்ஸ்"  என்ற நிகழ்ச்சி ஆகும். அதில் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய பாவனா பின்னர் பிரபல பொழுது போக்கு தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இணைந்தார், 2011 ஆம் ஆண்டில் அத்தொலைக்காட்சியில் சில முன்னணி நிகழ்ச்சிகளில் முக்கிய தொகுப்பாளராக வலம் வந்தார் பாவனா, விஜய் டீவியால் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்றான " சூப்பர் சிங்கர் ஜூனியர்",  2018- ல் "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பாளர் மாகபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

விளையாட்டு சேனல்களில் விண்ணைத் தொட்ட பாவனா.. 

அதைத்தொடர்ந்து ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கினார். அவரின் ஆங்கிலப்புலமை மற்றும் ஆங்கில உச்சரிப்பு, மொழி வளம் அடிப்படையாக வைத்து 2017 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  விளையாட்டுத் தலைக்காட்டி சேனலில்  இணைந்தார். இந்தியன் பிரீமியர் லீக், ப்ரோ கபடி லீக் , 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளராகவும் பணியாற்றி சிறந்த வர்ணனையாளர் தொகுப்பாளர் என்பது நிரூபித்து காட்டினார்.2018 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் 2 பெண் தொகுப்பாளர்களில் ஒருவராக அதை தொகுத்து வழங்கினார் பாவனா பாலகிருஷ்ணன்.

Who is Bhavana Balakrishnan who  best host the Olympiad?

பாடகியாக பரிணமித்த பாவனா... 

இதுமட்டுமின்றி கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் பாடகியாகவும் அறிமுகமானார், தி மாஷாப்  என்ற இசை சீரியஸையும் வெளியிட்டார்,  2020ஆம் ஆண்டில் இசை இயக்குனர் தரணிக்காக பின்னர் பாடல் என்றையும் பாடினார்,  அதைத் தொடர்ந்து  அவர் பாடி வெளியிட்ட வீராதி வீர என்ற பாடல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடலாக உள்ளது. 40 வயதாகும் பாவனா பாலகிருஷ்ணன் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நீதில் ரமேஷ் திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios