செஸ் ஒலிம்பியாட் தொடரின் 3வது சுற்றில் இந்தியாவின் ரோனக் சத்வானி மற்றும் நந்திதா ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. முதல் 2 சுற்றுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 3வது நாளான இன்று 3வது சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. 3வது சுற்றில் ரோனக் சத்வானி மற்றும் நந்திதா வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய மகளிர் சி அணி ஆஸ்திரியாவை எதிர்கொண்டு ஆடிவருகிறது. சி அணியில் இடம்பெற்றுள்ள நந்திதாவை எதிர்கொண்டு ஆடவேண்டிய ஆஸ்திரிய வீராங்கனை சைரா என்ற உடல்நலக்குறைவால் இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய ஆடவர் பி அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்த்து ஆடிவருகிறது. பி அணியில் இடம்பெற்றிருந்த ரோனக் சத்வானி, சுவிட்சர்லாந்து வீரர் ஃபேபியனை 38வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
