நியூசிலாந்துக்கு கடைசி ஒருநாள் போட்டியில் கங்குலியின் சாதனையை முறியடித்து கிறிஸ் கெய்லின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்ய வாய்ப்புள்ளது. 

பேட்டிங்கை பொறுத்தமட்டில் சாதனைகள், சதங்கள், ரேங்கிங் ஆகிய அனைத்திலுமே விராட் கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா உள்ளார். ரோஹித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட்டில் சதங்களை குவித்துவருகிறார். இதுவரை 22 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, கங்குலி மற்றும் திலகரத்னே டில்ஷான் ஆகிய இருவரையும் சமன் செய்துள்ளார்.

சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 7வது இடத்திலும் இந்திய அளவில் சச்சின், கோலிக்கு அடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளார் ரோஹித். சர்வதேச அளவில் 7வது இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் கங்குலியுடன் பகிர்ந்துள்ளார் ரோஹித். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் சதமடித்தால், 23 சதங்களுடன் கெய்லை சமன் செய்வார். சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தை கெய்லுடன் பகிர்ந்துகொள்வார். இந்திய அளவில் சச்சின், கோலிக்கு அடுத்த மூன்றாவது இடத்தை பிடித்துவிடுவார்.