சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 2-வது பகுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெயின் அணியை வென்றது. 

ரியல் மாட்ரிட் அணி முதல் பகுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இரு ஆட்டங்களிலும் முன்னிலை பெற்றதை அடுத்து ரியல் மாட்ரிட் காலிறுதிக்கு முன்னேறியது.

ரியல் மாட்ரிட் அணிக்கான கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோவும், பாரீஸ் அணிக்கான கோலை எடின்சன் கவானியும் அடித்தனர். இதில் ரொனால்டோ அடித்த முதல் கோல், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்கான அவரது 100-ஆவது கோல் ஆகும்.

பாரீஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.