Captain announcement for England football team New captain

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணிக்கு ஹாரிகேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடக்கின்றன. 

இதில் 32 நாடுகள் மோதவுள்ளன. இந்த நாட்டு கால்பந்து அணி தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி, இங்கிலாந்து அணிக்கு டாட்டன்ஹாம் முன்கள வீரர் ஹாரி கேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 24 வயதான ஹாரி 23 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 12 கோல்களை அணிக்காக அடித்துள்ளார். 

தேசிய கால்பந்து சங்கம் சார்பில் அணியின் மேலாளர் சௌத்கேட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

"இது தனக்கு கிடைத்த பெரிய கௌரவம்" என்று ஹாரிகேன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.