Asianet News TamilAsianet News Tamil

18 வயதான பஜன் கவுர் வில்வித்தையில் தோல்வி – காலியிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற்றம்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற வில்வித்தையில் எலிமினேஷன் சுற்று போட்டியில் 18 வயதான பஜன் கவுர் தோல்வி அடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

Bhajan Kaur Eliminated From Round of 16 after loss against Indonesia's Diananda Choirunisa In Womens Archery Individual Event at Paris Olympics 2024 rsk
Author
First Published Aug 3, 2024, 4:27 PM IST | Last Updated Aug 3, 2024, 4:27 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி பதக்க பட்டியலில் 47ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தோல்வி அடைந்து 4ஆவது இடம் பிடித்து பதக்கத்தை இழந்து வெளியேறியுள்ளார்.

Paris 2024 Olympics: ஒலிம்பிக் கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை வழங்கிய இந்திய தூதரகம்!

இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மகளிருக்கான தனிநபர் எலிமினேஷன் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் இந்தோனேசியாவைச் சேர்ந்த தியானந்தா சொய்ருனிதாவிடம் தோல்வி அடைந்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளார்

இதே போன்று மற்றொரு போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் க்ரோப்பனை எதிர்கொண்டார். இதில் அவர் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று மாலை 4.30 மணிக்கு காலிறுதிப் போட்டி நடைபெறுகிறது.

ஹாட்ரிக் பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர் - மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 4ஆவது இடம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios