Paris 2024 Olympics: ஒலிம்பிக் கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை வழங்கிய இந்திய தூதரகம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேம்ஸ் கிராமத்தில் தங்கியுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 40 குளிர்சாதனங்களை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. துப்பாக்கி சுடுதலில் மட்டுமே இந்தியா பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. மற்ற போட்டிகளில் எல்லாம் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறி வருகிறது. கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடக்க விழா உடன் தொடங்கப்பட்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரிஸில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது அனைத்து வீரர்களுக்கும் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சில விளையாட்டு வீரர்கள், தங்குவதற்கு ஹோட்டல்களை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டு வர முடிவு செய்தனர். அமெரிக்கா போன்ற சில நாடுகள் தங்களது விளையாட்டு வீரர்களுடன் கையடக்க ஏசிகளை ஒலிம்பிக் கிராமத்திற்கு அனுப்பியுள்ளன.
இந்த நிலையில் தான் தற்போது பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏசிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வுந் நேரத்தை சிறப்பாக அனுபவிக்க முடியும். விளையாட்டு அமைச்சகம் SAI, IOA மற்றும் பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு போர்ட்டபிள் ஏசிகளை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஏசிகளின் அனைத்து செலவையும் விளையாட்டு அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது.
- Anantjeet Singh Naruka
- Badminton
- India Medal Table
- Indian Olympic Committee
- Lakshya Sen
- Maheshwari Chauhan
- Manu Bhaker
- Nethra Kumanan
- Olympics 2024
- Olympics 2024 Medal Table
- Olympics India Schedule 2024
- PV Sindhu
- PV Sindhu Eliminated
- Paris 2024
- Paris 2024 Olympics
- Paris Olympics 2024
- Raiza Dhillon
- Sports
- Vishnu Saravanan
- Indian Embassy