Asianet News TamilAsianet News Tamil

கோலியின் இடத்தை பிடித்த ராகுல்.. தவானுக்கு புரமோஷன்!! ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 

bcci announces indian squad for asia cup
Author
India, First Published Sep 1, 2018, 1:57 PM IST

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்துள்ளது. அவற்றில் 6 முறை இந்திய அணியும் 5 முறை இலங்கை அணியும் 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளன. 14வது தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம் பெறும். செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளான 19ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆடுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான அணி தேர்வு மும்பையில் இன்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைபெற்றது. 

bcci announces indian squad for asia cup

பின்னர் ஆசிய கோப்பைக்கு தேர்வுக்குழு தேர்வு செய்த 16 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. தொடர்ந்து ஆடிவரும் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். கோலி அணியில் இல்லாததால், மூன்றாவது வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க உள்ளார். 

அம்பாதி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர் மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

bcci announces indian squad for asia cup

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios