barcelona won champion by Messi triple goal
ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிட்டிடம் இருந்த பட்டத்தை பார்சிலோனா அணி கைப்பற்றியது.
ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகிறது. கிளப்புகளுக்கு இடையேயான இந்த கால்பந்து சாம்பியன் போட்டி லா லிகா என அழைக்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான இறுதிப் போட்டியில் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவும் - டெபோர்டிவா லா குரோனா அணியும் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து தனது அணி 25-வது பட்டத்தை வெல்ல உதவினார். இறுதியில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் டெபோர்டிவா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி வசம் இருந்த பட்டத்தை பார்சிலோனா அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை பார்சிலோனா இந்த சீசனில் தோல்வியே தழுவாத அணியாக திகழ்கிறது.
பார்சிலோனா அணியின் கேப்டன் இனியஸ்டா இந்த சீசனோடு தனது 22 ஆண்டுக்கால தொடர்பை முடித்துக் கொண்டு விடை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு போட்டியின் முடிவில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
