உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வருவது, ஒரு அணியாக இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

ரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மிக வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் பயங்கர மிரட்டலாக உள்ளது. இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ் மூலம் தீர்வு காணப்பட்ட திருப்தியில் இந்திய அணி உள்ளது. 

கடந்த ஓராண்டாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி ஹாட்ரிக் அரைசதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அதன்பிறகு தோனி தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்.

தோனியின் ஃபார்ம், நான்காம் வரிசை குறித்த விவாதத்தை தொடங்கிவைத்தது. தோனியை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்ற கருத்தை பல முன்னாள் வீரர்கள் தெரிவித்துவருகின்றனர். தோனி - ராயுடு ஆகிய இருவரில் யாரை 4ம் வரிசையில் இறக்கலாம் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இருவருமே வேண்டாம் என்று கூறியுள்ள முன்னாள் அசாருதீன், அவர் ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாருதீன், ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் ஆடும் லெவனில் எடுத்து அவரை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும். அவரது விக்கெட் கீப்பிங்கில் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை அவரை 4ம் வரிசையில் இறக்கலாம் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.