IndvsAus:இந்தியா-ஆஸி.டெஸ்ட்| அகமதாபாத் போட்டியை ஆஸ்திரேலியப் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வரும் மார்ச் மாதம் இந்தியா வர உள்ளார். அவருடன் சேர்ந்து அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி பார்க்க உள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வரும் மார்ச் மாதம் இந்தியா வர உள்ளார். அவருடன் சேர்ந்து அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி பார்க்க உள்ளார்.
ஆஸ்திரேலியா பிரதமராகிய பின் அந்தோனி அல்பானீஸ் முதல்முறையாக இந்தியாவுக்கு வர உள்ளார்.
இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி பயணம் மேற்கொண்டு டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கெனவே இரு டெஸ்ட்போட்டிகள் முடிந்து அதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் - அவசர அவசரமாக நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ்!
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி இந்தூரில் நடக்கிறது. கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 9ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமரும் இணைந்து பார்க்க உள்ளனர்
இந்தியாவுக்கு மார்ச் 8ம் தேதி ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி வருகை தரஉள்ளார். அப்போது, இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை இரு தலைவர்களும் பார்வையிடலாம் எனத் தெரிகிறது.
இந்தியாவுக்குமுதல்முறையாகப் பயணிக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ், பிரதமர் மோடியுடன் வர்த்தகம், முதலீடு, தாதுக்கள் ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்த உள்ளார்.
கடந்த வாரக் கடைசியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆஸ்திரேலியா சென்று ஆஸ்திரேலிய பிரதமர் வருகையை உறுதி செய்தார்.
கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உனக்கு இடம் இல்ல..! மறைமுகமாக சொன்ன பிசிசிஐ
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ட்விட்டில் பதிவிட்ட செய்தியில் “ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. அடுத்தமாதம் இந்தியா செல்ல இருக்கிறேன். இருநாட்டு ராஜாங்கரீதியான உறவு, பொருளாதார வாய்ப்புகள், மக்கள் தொடர்புகள் குறி்த்து விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்