Australia defeated Germany for the first time in 32 years
உலகக் கோப்பை கால்பந்து 2018-இன் ஒரு பகுதியாக நடந்து வரும் நட்பு ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
உலகக் கோப்பை போட்டிகள் ரஷியாவில் வரும் 14 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடக்கின்றன. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கு தயாராகும் வகையில் பல்வேறு அணிகள் நட்பு ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் உலகச் சாம்பியன் ஜெர்மனியுடன் லகேன்பர்ட் நகரில் நேற்று நடந்த நட்பு ஆட்டத்தில் ஆஸ்திரியா அணி மோதியது.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வென்றது. இந்த தோல்வி ஜெர்மனியின் பயிற்சியாளர் ஜோசிம் லியுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
32 ஆண்டுகளில் ஜெர்மனியை முதன்முறையாக ஆஸ்திரியா வென்றுள்ளது. தனது இறுதி நட்பு ஆட்டத்தில் சௌதி அரேபியாவுடன், ஜெர்மனி மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற மற்றொரு நட்பு ஆட்டத்தில் ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் - பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் மோதிய ஆட்டம் 0-0 என கோலின்றி சமனில் முடிந்தது.
