ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்று ஆட்டத்தில் பிரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 2-3 என்ற கணக்கில் சீனாவின் சன் லீயிடம் வீழ்ந்தார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தானில் நேற்று நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பிரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 2-3 என்ற கணக்கில் சீனாவின் சன் லீயிடம் வீழ்ந்தார்.

அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை யூகி ஐரீயை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அவர், இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

இந்த முறை இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவின் சார்பில் வெள்ளி வென்ற ஒரே வீராங்கனை இவரே.

50 கிலோ எடைப் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், யூகி ஐரீயை எதிர்கொண்டார் வினேஷ்.

கடும் சவாலாக விளங்கிய அவருடன் போட்டியிட்டு 4-4 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். எனினும், அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் வினேஷ் போகட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, இறுதிச்சுற்றில் சீனாவின் சன் லீயை எதிர்கொண்டார். காலிறுதியில் 5-15 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நபிரா எசன்பாவாவிடம் தோல்வி அடைந்த இந்தியாவின் சங்கீதா, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தென் கொரியாவின் ஜீயனை எதிர்கொண்டார்.

பிரீ ஸ்டைலில் 59 கிலோ எடைப் பிரிவில் மோதிய அவர், ஜீயனை 9-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

மல்யுத்தத்தில் கிரேக்க-ரோமன் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. 82 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ஹர்பிரீத் சிங்கும், 55 கிலோ எடைப் பிரிவில் ராஜேந்திர குமாரும் வெண்லகம் வென்ற வீரர்கள் ஆவர். ஆக மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா இதுவரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.