ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதிப்பெற்றுள்ளார். அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியை 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். 

8-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த யமகூச்சியை எதிர்கொண்டார்.

 

இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவருக்கும் கடுமையான போராட்டத்துடன் நீடித்த இப்போட்டியில் முதல் செட்டை சிந்து 21-17 என கைப்பற்றினார். அடுத்த செட்டை யமகூச்சி 21-14 என அதிரடியாக தன் வசமாக்கினார். வெற்றி தீர்மானிக்கும் 3-வது சுற்றி பரபரப்புடன் தொடங்கியது. கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிந்து, 21-10 என செட்டை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மேலும் இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா சார்பில் பங்கேற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.