Asian Boxing Tournament three Indian player advanced to semi finals
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் மூன்று இந்தியர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு காலிறுதியில் 60 கிலோ பிரிவில் இந்தியர் அங்கித் கடானா - தென் கொரியாவின் சியோம்ஹோ ஷின்னை தோற்கடித்தார்.
அதேபோன்று, 52 கிலோ பிரிவில் இந்தியாவின் பாவேஷ் குமார் - மலேசியாவின் ரஸ்தெனால் ஹைகால் முகமதை வீழ்த்தினார்.
மற்றொரு பிரிவான 91 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் இந்தியாவின் அமன் - சீனாவின் மா ஜின்யாங்கை வீழ்த்தினார்.
போட்டியில் வென்ற இந்தியர்கள் மூவரும் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
எனினும், பருன் சிங் 49 கிலோ எடைப் பிரிவிலும், ஹிம்மத் சிங் 91 கிலோ எடைப் பிரிவிலும், ஆகாஷ் குமார் 64 கிலோ எடைப் பிரிவிலும், ஆகாஷ் 56 கிலோ எடைப் பிரிவிலும், விஜய் தீப் டன்ஹன் 69 கிலோ எடைப் பிரிவிலும், ரோனக் 81 கிலோ எடைப் பிரிவிலும் தங்களது காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
இந்தப் போட்டியின் மகளிர் பிரிவில் ஏற்கெனவே ஐந்து இந்தியர்கள் பதக்கச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இதுவரையில் இந்தியாவுக்கு எட்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
