செஸ் போட்டி குறித்து 8 வயது சிறுமிகள் எழுப்பிய கேள்விக்கு விஸ்வநாதன் ஆனந்த்  பதில் சொல்ல முடியாமல் திணறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இரட்டை சிறுமிகள் எழுப்பிய அந்தக் கேள்விக்கு " No Idea " என அவர் பதிலளித்துள்ளார். 

செஸ் போட்டி குறித்து 8 வயது சிறுமிகள் எழுப்பிய கேள்விக்கு விஸ்வநாதன் ஆனந்த் பதில் சொல்ல முடியாமல் திணறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இரட்டை சிறுமிகள் எழுப்பிய அந்தக் கேள்விக்கு " No Idea " என அவர் பதிலளித்துள்ளார். 5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறுமிகள் செக்மேட் வைத்துவிட்டனர் என்றும் பலரும் அந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  Randa Sedar: வெறும் எட்டே வயதில் செஸ் ஒலிம்பியாடில் பட்டைய கிளப்பும் பாலஸ்தீன சிறுமி..!

உலக அளவில் பெற்றார் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கான தொடக்க விழா நேரு விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது, 150க்கும் அதிகமான நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளன, ஏராளமான வீரர்கள் அணிகள் போட்டியில் பங்கெடுத்துள்ளன. போட்டி தொடங்கிய ஆரம்ப முதலிலிருந்தே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் உற்சாகமாக நடைபெற்றுவரும் செஸ் போட்டிக்கு இடையில் விஸ்வநாத் ஆனந்த், சர்வதேச வீரர்களிடம் கேள்வி கேட்கும் வகையில் பார்வையாளர்களுக்கு வாய்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று ஐந்து முறை உலகச் சாம்பியன் ஆன விசுவநாதன் ஆனந்திடம் பார்வையாளர்கள் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது, அப்போது அங்கு வந்திருந்த 8 வயது இரட்டை சிறுமிகள் விஸ்வநாத் ஆனந்திடம் இரு கேள்விகளை வைத்தனர், அச்சிறுமிகள் எழுப்பிய கேள்வி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, கேள்வி நேரத்தின்போது இரட்டைச் சிறுமிகளில் ஒருவர் செஸ் காயின்களை எப்படி மறுபடியும் ரீசெட் செய்வது என கேள்வி எழுப்பினார். அதற்கு விஸ்வநாத் ஆனந்த் பதிலளிக்க தொடங்கியபோது குறுக்கிட்ட அந்த சிறுமி காயின்களை வைத்து எதிரணியினரை எப்படி திசை திருப்புவது என கேள்வி எழுப்பினார்.

Scroll to load tweet…

கேள்வியைக் கேட்டு சற்று திகைத்துப் போன விஸ்வநாத் ஆனந்த் அதற்கு பதிலளிக்க முடியாமல் I have no idea எனக் கூறினார். அப்போது அவையில் இருந்து கைதட்டல் எழுந்தது, விஸ்வநாதன் ஆனந்த் சிறுமிகளில் கேள்விக்கு தனது மகிழ்ச்சி சிரிப்பை வெளிப்படுத்தினார். மேலும் இந்த இக்கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், இன்றைய தினத்திற்கான கேள்வி என்று பதிவிட்டுள்ளார். ஐந்து முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்கே 8 வயது சிறுமிகள் செக்மேட் வைத்துவிட்டார்களே என்று கூறி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:  செஸ் ஒலிம்பியாட்: 3வது சுற்றில் இந்தியாவின் ரோனக் சத்வானி, நந்திதா வெற்றி