ambati rayudu strange record in ipl history

ஒரு ஐபிஎல் சீசனில் ஒரே அணிக்கெதிராக சதமும் அடித்து டக் அவுட்டும் ஆன வீரர்களின் வரிசையில் சென்னை அணி வீரர் அம்பாதி ராயுடுவும் இணைந்துள்ளார்.

ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னை அணி, 7வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

இந்த போட்டியில் அம்பாதி ராயுடு டக் அவுட்டாகி வெளியேறினார். இதே ஹைதராபாத் அணிக்கு எதிரான 46வது லீக் போட்டியில் அம்பாதி ராயுடு சதமடித்தார். சதமடித்த அணிக்கெதிராக அதே சீசனில் டக் அவுட்டாகியுள்ளார் ராயுடு. ராயுடுவைப்போலவே மற்ற சில வீரர்களும், ஒரு சீசனில் ஒரே அணிக்கெதிராக சதமும் எடுத்து டக் அவுட்டும் ஆகியுள்ளனர். 

அந்த வீரர்களின் பட்டியல்:

1. டி வில்லியர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (2009)

2. டேவிட் வார்னர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2010)

3. கிறிஸ் கெய்ல் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011)

4. ஆடம் கில்கிறிஸ்ட் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2011)

5. முரளி விஜய் vs டெல்லி டேர்டெவில்ஸ் (2012)

6. விராட் கோலி vs குஜராத் லயன்ஸ் (2016)