Paris Paralympics 2024: பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: இந்தியாவின் வீரர்கள், நிகழ்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள்!
இன்று இரவு 11.30 மணிக்கு பாரிஸில் தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 12 விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய அணி, கடந்த முறை பெற்ற 19 பதக்கங்களை விட அதிக பதக்கங்களை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரைத் தொடர்ந்து இன்று இரவு 11.30 மணிக்கு பாராலிம்பிக்ஸ் 2024 தொடர் தொடங்குகிறது. பாரிஸில் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்கும் பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பில் 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில், 52 வீரர்கள் மற்றும் 32 வீராங்கனைகள். பாரா ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜூடோ, பவர்லிஃப்டிங், ரோவிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, பாரா கேனோயிங் உள்பட மொத்தமாக 12 விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் 26 விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று இரவு 11.30 மணிக்கு தொடங்கும் பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் சுமித் அண்டில் இருவரும் தேசிய கொடி ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கும் பாராலிம்பிக்ஸ் தொடரானது வரும் 8ஆம் தேதி வரையில் 12 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் தொடரில் போட்டியிட்ட 54 விளையாட்டு வீரர்களில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என்று மொத்தமாக 19 பதக்கங்களை கைப்பற்றியது. இதுவரையில் பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா 31 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார் யார் தெரியுமா?
ராகேஷ் குமார், ஷ்யாம் சுந்தர் சுவாமி, ஹர்வீந்தர் சிங், ஷீத்தல் தேவி, சரீதா அதனா, பூஜா ஜத்யன், ப்ரீத்தி பால், சிம்ரன் சர்மா, தீப்தி ஜிவான்ஜி, திலீப் கவித், ரக்ஷிதா ராஜூ, தரம்பீர் நைன், பிரனவ் சொர்மா, அமித் குமார் சரோஹா, யோகேஷ் கதுனியா, சரத் குமார், நிஷாத் குமார், பிரவீன் குமார், நவ்தீப் சிங், அஜீத் சிங், ரிங்கு, சுமித் அண்டில், காஞ்சன் லக்கானி, சாக்ஷி கசானா, கரம்ஜோதி என்று 84 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
Jay Shah Cricket Journey: ஜெய் ஷாவின் கிரிக்கெட் பயணம்: மாவட்ட அளவில் இருந்து ஐசிசி தலைவர் வரை!
பாரிஸில் உள்ள பிளேஸ் டி லா கான்கார்ட் என்ற பகுதியில் பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா நடைபெறுகிறது. அனைத்து பாரா ஒலிம்பிக் நிகழ்வுகளும் பாரிஸிலும் அதனைசு சுற்றியுள்ள பகுதியிலும் நடைபெறும். இதில் சைண்ட் டெனிஸ் மற்றும் வெர்சைலிஸ் ஆகிய பகுதிகளிலும் Vaires-sur-Marne என்ற பகுதியிலும் போட்டிகள் நடைபெறுகிறது.