இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சென்னை மாணவர் ஆர்.பிரக்னானந்தா 3-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 92-ஆவது ஹேஸ்டிங்ஸ் செஸ் போட்டியில், சென்னை, முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளியில் 6-ஆம் வகுப்பும் படிக்கும் ஆர்.பிரக்னானந்தா பங்கேற்றார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், போட்டியில் 3-ஆவது இடம் பெற்றார்.

அவருக்கு பரிசும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

இவருக்கு பள்ளி சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் இருந்து வாழ்த்துகள்  குவிந்த வண்ணம் இருக்கிறது.

சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்று, அதுவும் ஆறாவது படிக்கும் மாணவன் வென்று இருப்பது பள்ளி மாணவர்களிடையே சாதிக்கும் உணர்வைத் தூண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.