Asianet News TamilAsianet News Tamil

ZIM vs IND: ஷர்துல் தாகூர் அபார பவுலிங்.. ஜிம்பாப்வேவை 161 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், அந்த அணியை 161 ரன்களுக்கு சுருட்டி, 162 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது இந்திய அணி.
 

zimbabwe set very easy target to india in second odi
Author
Harare, First Published Aug 20, 2022, 4:30 PM IST

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. தீபக் சாஹர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க - நீங்க பண்றது எல்லாமே தப்புதான்! பிறகு எப்படி ஃபார்முக்கு வருவது? கோலியை செமயா விமர்சித்த பாக்., முன்னாள் வீரர்

இந்திய அணி:

ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.  31 ரன்களுக்கே ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், சீன் வில்லியம்ஸும் ரியான் பர்லும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

இதையும் படிங்க - என்னை ஓபனிங்கில் இறக்க சொல்லி கங்குலியிடம் பரிந்துரைத்தது அந்த வீரர் தான்..! சேவாக் ஓபன் டாக்

சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியான் 39 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 38.1ஓவரில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அக்ஸர் படேல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

162 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டுகிறது. இந்த இலக்கை எளிதாக அடித்து இந்திய அணி இந்த தொடரை வென்றுவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios