மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் யுபி வாரியர்ஸும் மோதுகின்றன. இரு அணிகளுமே ஆடிய முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியி இந்த 2 அணிகளும் மோதுகின்றன.
மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் போட்டியில் ஆர்சிபியையும், அலைஸா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.
மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
யுபி வாரியர்ஸ் அணி:
அலைஸா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சிம்ரன் ஷேக், தேவிகா வைத்யா, சோஃபி எக்லிஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, மேரிஸன் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், டாரா மோரிஸ்.
