WPL 2023:மெக் லானிங் அபார அரைசதம்; ஜோனாசென் காட்டடி ஃபினிஷிங்! 20 ஓவரில் 211 ரன்களை குவித்தது டெல்லி கேபிடள்ஸ்
மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 211 ரன்களை குவித்து, 212 ரன்கள் என்ற கடினமான இலக்கை யுபி வாரியர்ஸுக்கு நிர்ணயித்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் யுபி வாரியர்ஸும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே ஆடிய முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் இந்த 2 அணிகளுமே வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கின.
மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
யுபி வாரியர்ஸ் அணி:
அலைஸா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சிம்ரன் ஷேக், தேவிகா வைத்யா, சோஃபி எக்லிஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட்.
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் என்னென்ன மாற்றங்கள்..? கடைசி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவன்
டெல்லி கேபிடள்ஸ் அணி:
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, மேரிஸன் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், டாரா மோரிஸ்.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் மெக் லானிங். ஷஃபாலி வெர்மா 17 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி 22 பந்தில் 34 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஜெஸ் ஜோனாசென் 20 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களை விளாசி மிகச்சிறப்பாக முடித்து கொடுத்தார்.
IND vs AUS: வாழ்வா சாவா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்
மெக் லானிங்கின் அரைசதம், ஜெமிமாவின் பொறுப்பான பேட்டிங் மற்றும் ஜோனாசெனின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 211 ரன்களை குவித்து டெல்லி கேபிடள்ஸ் அணி, 212 ரன்கள் என்ற கடினமான இலக்கை யுபி வாரியர்ஸுக்கு நிர்ணயித்தது.