மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் டெல்லி கேபிடள்ஸ் 2ம் இடத்திலும் வலுவான நிலையில் உள்ளன.
யுபி வாரியர்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் நிலையில், 7 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் கடைசி 2 இடங்களில் உள்ளன.
ஒருநாள் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா அபார சாதனை..! சச்சின், கபில் தேவுடன் இணைந்தார் ஜடேஜா
ஆர்சிபி அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்று வெற்றிப்பாதையில் பயணிக்கும் நிலையில், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் யுபி வாரியர்ஸை இன்று எதிர்கொள்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியிக்ல் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:
சோஃபியா டன்க்லி, லாரா வோல்வார்ட், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், சுஷ்மா வெர்மா, ஸ்னே ராணா (கேப்டன்), கிம் கார்த், மோனிகா படேல், டனுஜா கன்வார், அஷ்வனி குமாரி.
இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!
யுபி வாரியர்ஸ் அணி:
தேவிகா வைத்யா, அலைஸா ஹீலி (கேப்டன்), கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, சோஃபி எக்லிஸ்டோன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட்.
