உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம்; இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இல்லை: ஜெய்ஷா!
ஒரு சில நாட்களில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணையில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான அட்டவணையும் கடந்த மாதம் வெளியானது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த உலகக் கோப்பை தொடரானது, அகமதாபாத், டெல்லி, ஹைதராபாத், சென்னை, புனே, மும்பை, பெங்களூரு, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய மைதானங்களில் நடக்க இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. மிக முக்கியமான போட்டி என்பதால், ரசிகர்களின் வருகை அதிகளவில் இருக்கும். ஏற்கனவே ஹோட்டல்கள், விமானங்கள், ரயில்கள் ஆகியவற்றில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும்.
WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!
எனினும், அக்டோபர் 15 ஆம் தேதியன்று போக்குவரத்து பாதிக்கப்படும், பாதுகாப்பு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆதலால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தான், உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், அதற்காக உலகக் கோப்பை தொடர் நடக்கும் 10 மைதானங்களிலும் பாதுகாப்பு குறித்தும், நிறை, குறைகள் குறித்தும் ஆலோசிக்க இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ஷா கூறியிருப்பதாவது: உலகக் கோப்பை போட்டி தேதிகளை மாற்றக்கோரி சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. ஆனால், அட்டவணையில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும். அதுவும் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படுமே தவிர, போட்டி நடக்கும் மைதானங்களில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
மேலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது உடல் தகுதியுடன் இருப்பதால் அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, உலகக் கோப்பை தொடரின் போது ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!