திரும்ப வந்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பக்கா பிளான் போட்ட ரோகித் சர்மா: இந்தியா பீல்டிங் தேர்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் விடாமல் பெய்த மழையின் காரணமாக போட்டி டிரா ஆனது. இதன் காரணமாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்று கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று பார்படாஸ் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டியின் மூலமாக முகேஷ் குமார் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து இதுனால் வரையிலும் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். சூர்யகுமார் யாதவ் உள்ளூர் போட்டிகளில் விளையாடிவிட்டு தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரகானே, முகமது சிராஜ் ஆகியோர் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருல்லாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு நடந்த எந்த தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற அவருக்கு முதல் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ்:
ஷாய் ஹோப் (கேப்டன் – விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவால், ரோமரியோ ஷெப்பர்டு, யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி