மகளிர் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. க்ரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

நேற்று நடந்த முதல் போட்டியில் க்ரூப் 1ல் இடம்பெற்ற தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

நீங்க பண்ணது தப்பு.. விதி மீறிய ஜடேஜா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

இன்று நடக்கும் போட்டியில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி:

ஹைலி மேத்யூஸ் (கேப்டன்), ரஷாடா வில்லியம்ஸ் (விக்கெட் கீப்பர்), ஷெமைன் கேம்ப்பெல், ஸ்டாஃபைன் டெய்லர், ஷாபிகா காஜ்நபி, சின்னிலி ஹென்ரி, செடீன் நேஷன், ஸைடா ஜேம்ஸ், அஃபி ஃப்ளெட்சர், ஷாமிலியா கானெல், ஷகீரா செல்மான்.

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு

இங்கிலாந்து மகளிர் அணி:

சோஃபியா டன்க்லி, டேனியெலி வியாட், அலைஸ் கேப்ஸி, நாடலி ஸ்கைவெர், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், கேத்ரின் ப்ரண்ட், சார்லோடி டீன், சாரா க்ளென், லாரன் பெல்.