மகளிர் டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. க்ரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்று நடக்கும் முதல் போட்டியில் க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜடேஜா

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் ப்ரிட்ஸ், அனெகெ போஷ், சன் லூஸ் (கேப்டன்), க்ளோ டிரயன், நாடின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), மாரிஸென் கேப், ஷப்னிம் இஸ்மாயில், அயபாங்கா காகா, நான்குலுலேகோ லாபா.

அவங்க 2 பேரையும் பென்ச்சில் உட்காரவைத்தது பெரிய தவறு..! ஆஸி., அணி தேர்வை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்

இலங்கை மகளிர் அணி:

சமாரி அத்தப்பத்து (கேப்டன்), ஹர்ஷிதா மாதவி, விஷ்மி குணரத்னே, நிலாக்‌ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி (விக்கெட் கீப்பர்), கவிஷா தில்ஹாரி, அமா காஞ்சனா, ஒஷாடி ரணசிங்கே, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா, அச்சினி குலசூரியா.