மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. க்ரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கிறது. கேப்டவுனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, யஸ்டிகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.
IND vs AUS: நாக்பூரில் பிட்ச்சில் சதமடித்து சாதித்தது எப்படி..? ரோஹித் சர்மா விளக்கம்
பாகிஸ்தான் மகளிர் அணி:
ஜவேரியா கான், முனீபா அலி (விக்கெட் கீப்பர்), பிஸ்மா மரூஃப் (கேப்டன்), நிதா தர், சிட்ரா அமீன், ஆலியா ரியாஸ், ஆயிஷா நசீம், ஃபாத்திமா சனா, ஐமான் அன்வர், நஷ்ரா சந்து, சாதியா இக்பால்.
