IND vs AUS: நாக்பூரில் பிட்ச்சில் சதமடித்து சாதித்தது எப்படி..? ரோஹித் சர்மா விளக்கம்

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார்.
 

rohit sharma explains how he shine on nagpur turning track in india vs australia first test

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான வார்னர், கவாஜா, ஸ்மித், லபுஷேன் ஆகியோரே  அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. வார்னர், கவாஜா தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். லபுஷேன் தாக்குப்பிடித்து ஆடி 49 ரன்களும், ஸ்மித் 37 ரன்களும் அடித்தனர். அலெக்ஸ் கேரி அடித்து ஆடி 36 ரன்கள் அடித்தார்.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 400 ரன்களை குவித்தது. இந்திய அணியில் ராகுல் (20), கோலி (12), புஜாரா(7) ஆகியோர் சோபிக்கவில்லை. அறிமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (8) மற்றும் கேஎஸ் பரத் (8) ஆகியோரும் சொதப்பினர். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடினார். அவர் மட்டும் ஏதோ வேறு பிட்ச்சில் பேட்டிங் ஆடியது போன்று இருந்தது. ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி சதமடித்தார். 120 ரன்களை குவித்தார் ரோஹித். இதன்மூலம் கேப்டனாக 3 ஃபார்மட்டிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

நீங்க பண்ணது தப்பு.. விதி மீறிய ஜடேஜா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

அவருக்கு பின் ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ஜடேஜா 70 ரன்களும், அக்ஸர் படேல் 84 ரன்களும் அடித்தனர். இந்திய அணி 400 ரன்களை குவித்தது.

223 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் 2வது இன்னிங்ஸில் முதல் இன்னிங்ஸை விட மோசமாக பேட்டிங் ஆடினர். மொத்தமாகவே வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு

இந்த போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே பேட்டிங் ஆட கஷ்டப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா மட்டும் பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி  அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த நிலையில், அதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஆடுகளங்களை பொறுத்தமட்டில் முறையான திட்டத்துடன் அதை சரியாக செயல்படுத்தி ஆட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஸ்கோர் செய்வது கடினம். பந்து நன்றாக திரும்பும் மும்பை ஆடுகளத்தில் பேட்டிங் ஆடி வளர்ந்தவன் நான். எனவே அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. வழக்கமான பாணியில் ஆடாமல் கால்களை நகர்த்தி ஆடவேண்டும். வித்தியாசமாக ஆடி  எதிரணி பவுலர்கள் மீது அழுத்தம் போடவேண்டும். என்ன மாதிரியான வித்தியாசம் காட்டுவது என்பதை நமது பலத்திற்கேற்ப முடிவு செய்துகொள்ள வேண்டும். கால்நகர்த்தல்கள், ஸ்வீப் ஆடுவது, ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவது என எந்தமாதிரியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios