Asianet News TamilAsianet News Tamil

மகளிர் டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை புரட்டி எடுத்த நாட் ஸ்கிவர் பிரண்ட்.! கடின இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 213 ரன்களை குவித்து, 214 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது. 
 

womens t20 world cup 2023 england set tough target to pakistan with the help of nat sciver brunt fifty
Author
First Published Feb 21, 2023, 8:28 PM IST

மகளிர் டி20 உலக கோப்பையில் க்ரூப் ஏ-விலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இன்று க்ரூப் ஏ-விலிருந்து மோதும் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேறும். தென்னாப்பிரிக்கா தோற்றால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.

க்ரூப் பி-யிலிருந்து இங்கிலாந்து, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் அந்த க்ரூப்பின் கடைசி லீக் போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருந்தால் பெரிய பிரச்னை..! பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை விளாசிய ஆலன் பார்டர்

இங்கிலாந்து மகளிர் அணி:

சோஃபியா டன்க்ளி, டேனியல் வியாட், அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், கேத்ரின் ஸ்கிவர் பிரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென், ஃப்ரெயா டேவிஸ்.

பாகிஸ்தான் மகளிர் அணி:

சடாஃப் ஷமஸ், முனீபா அலி, ஒமைமா சொஹைல், நிதா தர் (கேப்டன்), ஆலியா ரியாஸ், சிட்ரா அமீன், ஃபாத்திமா சனா, சிட்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, டுபா ஹசன், சாதியா இக்பால்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டன்க்லி (2) மற்றும் கேப்ஸி(6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 33 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 

பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் வியாட் மற்றும் 4ம் வரிசையில் இறங்கிய நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 3வது விக்கெட்டுக்கு74 ரன்களை சேர்த்தனர். வியாட் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய நாட் ஸ்கிவர் பிரண்ட் 40 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 80 ரன்களை குவிக்க, எமி ஜோன்ஸ் 31 பந்தில் 47 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 213 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 214 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios