மகளிர் டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 5 அணிகளும் க்ரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ளன.
க்ரூப் ஏ-வில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். க்ரூப் பி-யில் ஆடிய 2 போட்டிகளிலும் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்
க்ரூப் ஏ-வில் டாப் 2 இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய மகளிர் அணி:
அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், மேகன் ஸ்கட், டார்ஸி பிரௌன்.
இலங்கை மகளிர் அணி:
ஹர்ஷிதா சமரவிக்ரமா, சமரி அத்தப்பத்து (கேப்டன்), விஷ்மி குணரத்னே, அனுஷ்கா சஞ்சீவனி (விக்கெட் கீப்பர்), நிலக்ஷி டி சில்வா, மல்ஷா ஷெஹானி, ஒஷாஃபி ரணசிங்கே, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா, அச்சினி குலசூரியா.
