Asianet News TamilAsianet News Tamil

மகளிர் முத்தரப்பு டி20: ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்க அணி.
 

womens t20 tri series south africa beat india in final and wins trophy
Author
First Published Feb 2, 2023, 10:34 PM IST

முத்தரப்பு டி20 தொடர் ஃபைனல்:

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, யாஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ரேணுகா தாகூர் சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஸ்னே ராணா.

விராட் கோலியை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன்..! பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிரடி

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்த், டாஸ்மின் ப்ரிட்ஸ், லாரா குடால், சன் லூஸ் (கேப்டன்), ட்ரயான், அன்னெரி டெர்க்சென், நடின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காகா, நான்குலுலேகோ எம்லபா.

இந்திய அணி முதலில் பேட்டிங்:

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வீராங்கனைகள் அடித்து ஆடி ஸ்கோர் செய்யமுடியாமல் திணறினர். டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (0) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (11) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஹர்லீன் தியோல் தாக்குப்பிடித்து ஆடி ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 22 பந்தில் 21 ரன் மட்டுமே அடித்தார். தீப்தி ஷர்மா 16 ரன்கள் அடித்தார். ஹர்லீன் தியோல் 46 ரன்கள் அடித்தார். எந்த வீராங்கனையுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அடித்து ஆடவில்லை. எளிதாக ரன் வழங்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசி, இந்திய அணியை 20 ஓவரில் 109 ரன்களுக்கு சுருட்டியது தென்னாப்பிரிக்க அணி. 

உம்ரான் மாலிக்கின் மிரட்டல் வேகத்தில் 30 யார்டு வட்டத்தை தாண்டி விழுந்த ஸ்டம்ப் பெய்ல்..! வைரல் வீடியோ

தென்னாப்பிரிக்கா வெற்றி:

110 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய  தென்னாப்பிரிக்க மகளிர் அணி 66 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் க்ளோ ட்ரயான் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 57 ரன்கள் அடித்த ட்ரயான் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 18 ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முத்தரப்பு டி20 தொடரை வென்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios