உம்ரான் மாலிக்கின் மிரட்டல் வேகத்தில் 30 யார்டு வட்டத்தை தாண்டி விழுந்த ஸ்டம்ப் பெய்ல்..! வைரல் வீடியோ

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டியில் உம்ரான் மாலிக் 150 கிமீ வேகத்தில் வீசிய பந்தில் மைக்கேல் பிரேஸ்வெல் க்ளீன் போல்டானார். அந்த போல்டில் ஸ்டம்ப் பெய்ல் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே விழுந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

umran malik 150 km ball sends stump bail out of 30 yard circle in india vs new zealand third t20

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். டி20 கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லின் ஸ்டிரைக் ரேட் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த நிலையில், 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 63 பந்தில் 126 ரன்களை குவித்தார். அவரது அதிரடி சதத்தால் 20 ஓவரில் 234 ரன்களை குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை வெறும் 66 ரன்களுக்கு சுருட்டி 168 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 2-1 என டி20 தொடரை வென்றது.

ஆஸி., டெஸ்ட் தொடரில் ஆடுகிறார் ரவீந்திர ஜடேஜா.. க்ரீன் சிக்னல் கொடுத்த என்சிஏ

இந்த போட்டியில் உம்ரான் மாலிக் பந்துவீசிய வேகத்தில் ஸ்டம்ப் பெய்ல் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே விழுந்தது. இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் அண்மைக்காலத்தில் மிகச்சிறப்பான யூனிட்டாக வலுவடைந்துள்ளது. இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த பொக்கிஷம் இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்.

150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய பவுலர் உம்ரான் மாலிக். இந்தியாவிலிருந்து ஒரு பவுலர் இவ்வளவு வேகமாக வீசுவது அரிதினும் அரிது. 160 கிமீ வேகத்திற்கு மேல் கூட, ஒரு சில பந்துகளை வீசுகிறார். அதிவேகமாக வீசக்கூடிய உம்ரான் மாலிக், டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

SA vs ENG: பட்லர் அபார சதம்.. ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்.. கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் உம்ரான் மாலிக் 2 விக்கெட் வீழ்த்தினார். மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் டேரைல் மிட்செல் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். 5வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக், அந்த ஓவரின் 3வது பந்தில் பிரேஸ்வெல்லை கிளீன் போல்டாக்கினார் உம்ரான் மாலிக். உம்ரான் மாலிக் 150 கிமீ வேகத்தில் வீசிய அந்த பந்தில் ஸ்டம்ப் பெய்ல், கீப்பரின் தலைக்கு மேல் சென்று 30 யார்டு வட்டத்துக்கு வெளியே சென்று விழுந்தது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios