Asianet News TamilAsianet News Tamil

Women's Cricket:ஸ்மிரிதி மந்தனா, ஷெஃபாலி அபார பேட்டிங்! 2வது ODIயிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி.
 

womens cricket india beat sri lanka in second odi and win series by 2 0
Author
Pallekele, First Published Jul 4, 2022, 7:18 PM IST

இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை 2-1 என வென்ற இந்திய மகளிர் அணி, ஒருநாள் தொடரையும் 2-0 என வென்றுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில்  பேட்டிங் ஆடிய இலங்கை மகளிர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்ச ரன்னையே 8ம் வரிசை வீராங்கனை காஞ்சனா தான் அடித்தார். காஞ்சனா அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். நிலாக்‌ஷி டி சில்வா 32 ரன்கள் அடித்தார். 

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 ஆண்டுகால சாதனையை தகர்த்து வரலாறு படைத்தார் ரிஷப் பண்ட்..! சாதனைகளின் நாயகன் ரிஷப்

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகாசிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி 50 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வெர்மா ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். இந்த இலக்கை அடிக்க வேறு பேட்ஸ்மேனே தேவையில்லை; நாங்களே போதும் என்கிற வகையில் இருவரும் மிக அபாரமாக பேட்டிங் ஆடினர்.

இதையும் படிங்க - ENG vs IND: 2வது இன்னிங்ஸில் புஜாரா, ரிஷப் பண்ட் அரைசதம்.. மற்ற வீரர்கள் சொதப்பல்! இங்கி.,க்கு கடினமான இலக்கு

அதிரடியாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 83 பந்தில் 94 ரன்களையும், ஷெஃபாலி வெர்மா 71 பந்தில் 71 ரன்களையும் குவிக்க, 26வது ஓவரிலேயே இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios